‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநருக்கு கார் பரிசு!

‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநருக்கு கார் பரிசு!

‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநருக்கு கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் மகேஷ் ராஜ் பசிலியான். ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் மூலன் இயக்குநராக அறிமுகமானவர் அபிஷன் ஜீவிந்த். இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர், தற்போது நாயகனாக புதிய படமொன்றில் நடித்து முடித்துள்ளார்.

‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தில் தயாரிப்பாளர்களில் ஒருவராக பணிபுரிந்தவர் மகேஷ் ராஜ் பசிலியான். மேலும், அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடித்து வரும் படத்திலும் தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார். அக்டோபர் 31-ம் தேதி அபிஷன் ஜீவிந்த்திற்கு திருமணம் நடைபெறவுள்ளது. அவருக்கு திருமண பரிசாக பி.எம்.டபிள்யூ கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கிறார் தயாரிப்பாளர் மகேஷ்.