அனாதி சொத்துக்களை ஆட்டையை போடும் அதிகாரிகள் கும்பல். பகீர் பின்னணி !

சவுக்கு மீடியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்படி, தமிழ்நாட்டில் சில உயரதிகாரிகள் மற்றும் செல்வந்தர்கள் இணைந்து, அனாதி சொத்துக்கள் எனப்படும் உரிமையாளர் இல்லாத நிலங்களை போலி ஆவணங்களின் மூலம் கைப்பற்றும் பெரிய மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

பதிவு துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட சிலர் இணைந்து பழைய நில ஆவணங்களை “டபுள் டாக்குமெண்ட்” (இரட்டை பதிவு) செய்து, அந்த சொத்துகளை தனி நபர்களின் பெயரில் மாற்றி பதிவு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தக் கும்பல், பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலங்களை குறிவைத்து, போலி பத்திரங்கள் தயாரித்து கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை தங்களது வசமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சவுக்கு மீடியா இதுகுறித்து அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுத்து, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளவர்களை எதிர்த்து கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.