உலக அளவில் முடங்கிய அமேசானின் AWS வெப் சேவை: இயல்புக்கு திரும்பியதாக தகவல்

உலக அளவில் முடங்கிய அமேசானின் AWS வெப் சேவை: இயல்புக்கு திரும்பியதாக தகவல்

சென்னை: அமேசான் நிறுவனத்தின் அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) உலக முடங்கிய நிலையில் தற்போது அது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக அளவில் அமேசான் வெப் சர்வீசஸ் சேவையை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. சமூக வலைதளம், கேமிங் தளங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள், நிதி சேவை சார்ந்த செயலிகள் என பல்வேறு ஆன்லைன் தளங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன. ஸ்னாப்சேட், Venmo, பின்ட்ரஸ்ட், ஆப்பிள் டிவி, ரெட்-இட், ரோப்லாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றன.